News October 22, 2025

குமரி: பட்டாசு வெடித்த 13 பேர் மீது வழக்கு

image

தீபாவளி நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இதை கண்காணிக்க மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதன்படி 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. குமரியில் நேர விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பட்டாசு வெடித்ததில் காயமடைந்த 6 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். 

Similar News

News February 13, 2026

புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த எம் .எல். ஏ.

image

நாகர்கோவில் மாநகராட்சி எஸ்.பி அலுவலகம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் ரோஸிட்டா திருமால், பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

News February 13, 2026

குமரியில் ஒரே நாளில் 1,303 வழக்குகள் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 1,303 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட வழக்குகள் 780 பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.

News February 13, 2026

குமரி: இனி உங்களுக்கு காசு மிச்சம்.

image

குமரி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? இனி வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <>க்ளிக்<<>> செய்து TNSED Manarkeni செயலியை Install பண்ணுங்க. இதில் மாணவர்களுக்கு புரியாத பாடங்களுக்கு மாணவர்களுக்கு புரியும்படி தமிழ், இங்கிலீஷ்-ல் சொல்லி தருவாங்க.. கண்டிப்பாக உங்க போனில் இருக்க வேண்டிய செயலி . இந்த நல்ல தகவலை Share பண்ணி தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!