News November 8, 2025
குமரி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) குமரி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News November 8, 2025
குமரியில் கிடுகிடுவென உயர்ந்த தேங்காய் விலை

குமரி மாவட்டத்தில் ஈத்தாமொழி தேங்காய் மிகவும் பிரபலம் ஆகும். குமரி மாவட்டத்தில் பெரும்பாலான சமையல் தேங்காய் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. சந்தையில் கடந்த மாதம் வரை கிலோ ரூ. 55 க்கு விற்பனையான தேங்காய் தற்போது ரூ. 65 விலையில் விற்கப்பட்டுகிறது. சில்லறை கடைகளில் ரூ.68 வரை விலைக்கு போகிறது. தேங்காய் விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது என வியாபாரிகள் கூறினார்.
News November 8, 2025
குமரி: ஊராட்சியில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை., உடனே APPLY

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 32 வயதுகுட்பட்ட 10th முடித்தவர்கள் <
News November 8, 2025
குமரியில் மீனவர்கள் கவலை

குளச்சல் பகுதியில் 300 விசைபடகுகளும், 1000க்கும் மேல் வள்ளம், கட்டுமரங்களும் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. நேற்று மீனவர்கள் வலையில் அதிக அளவில் சாளை மீன்கள் சிக்கின. அவற்றை குளச்சல் ஏல கூடத்தில் ஏலமிட்டபோது ஒரு குட்டை சாளை மீன் ரூ.700 முதல் ரூ.800 விலை போனது. ஏலம் போகாத மீன்களை ரூ.100 விலையில் சிறு கூறுகளாக விற்றனர். அதிக மீன்கள் கிடைத்தும் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.


