News March 29, 2025
குமரி நல்வாழ்வு சங்கத்தில் வேலை வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Lab Technician, Pharmacist, Health Visitor என 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 12 ஆம் வகுப்பு , any Degree, B.Pharm, D.Pharm, Diploma, DMLT தபடித்தவர்கள் ஏப்.5 வரை விண்ணப்பிக்காலாம். தகுதியான நபர்களுக்கு ரூ.13,000 முதல் ரூ.19,800 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே <
Similar News
News September 18, 2025
குமரி: காதலிக்காக மூதாட்டியிடம் நகை பறிப்பு

பள்ளியாடி ஜெபனேசரின் தாயார் ரெஜி(63) 2 நாட்களுக்கு முன்பு கழிவறையில் மயங்கி விழுந்தார். அவரது கழுத்திலிருந்த 11 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. தக்கலை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருவட்டாரை சேர்ந்த ஆனந்த்(26) என்பவரை உண்ணாமலைக்கடையில் நேற்று கைது செய்தனர். இஞ்சினியரான ஆனந்த் வேலை கிடைக்காததால் பெயிண்டிங் வேலை பார்த்ததாகவும்,காதலிக்காக நகை பறித்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார்.
News September 18, 2025
குமரி: நடு ரோட்டில் பழுதாகி நின்ற லாரி

நாகர்கோவில் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளம் செல்லும் பாதையில் லாரி ஒன்று நேற்று திடீரென்று பழுதடைந்ததால் லாரியை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர் பழுதடைந்த லாரி கிரேன் மூலம் எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது.இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
News September 18, 2025
குமரி: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <