News January 18, 2026
குமரி: நண்பனை அரிவாளால் வெட்டியவர் கைது

கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் சுபின். வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ராஜித் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். பின்னர் இருவரும் நண்பர்களான நிலையில் சுபினை, ராஜித் மது குடிக்க அழைத்துள்ளார். அங்கு சென்ற சுபினை, ராஜித் அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து சுபின் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து ராஜித்தை கைது செய்தனர்.
Similar News
News January 26, 2026
குமரி: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

குமரி மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1.<
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..
News January 26, 2026
குமரியில் திருமணம் நிறுத்தம்; G Pay மூலம் பணம் பறிப்பு

கொட்டாரத்தைச் சேர்ந்த தனேஷுக்கும், தனிஷா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தனிஷா ரூ.35,000 கொடுத்து செல்போன் வாங்கி தர தனேஷிடம் கேட்டதால் தனேஷ் செல்போன் வாங்கி கொடுத்தார். ஆனால் திருமணம் நின்றுவிட்டது. தனிஷா தான் கொடுத்த பணத்தை தனேஷிடம் திரும்ப கேட்ட நிலையில் தனேஷை சிலர் சேர்ந்து தாக்கி அவரது ஜிப்பே மூலம் ரூ.40,000 தனிஷாவுக்கு அனுப்பிய நிலையில் இது தொடர்பாக போலீஸ் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 26, 2026
குமரி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <


