News October 15, 2024
குமரி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பேட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 260 தென்னை விவசாயிகள் 350 ஏக்கர் இன்சூரன்ஸ் செய்து உள்ளதாக மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பீபி ஜான் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்ந்து, மாவட்டத்தில் நெல் விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், இழப்பீடு மிக குறைவாக கிடைப்பதால் அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
Similar News
News August 16, 2025
வேளாண் உட் கட்டமைப்புக்கு ரூ.66 கோடி இலக்கு – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் வேளாண் உட் கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடி இலக்கு நிற்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மகளிர் திட்டத்திற்கு தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
குமரி: ரூ.96,000 ஊதியத்தில் வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள்<
News August 16, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட் 16) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.67 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.32 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.25 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.55 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1053 ( 707 ) கன அடி, பெருஞ்சாணிக்கு 421 (210) கனஅடி நீர்வரத்தும் உள்ளது.