News January 2, 2026
குமரி: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

தத்தன்விளையை சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி ஜெகன் (46). இவர் நேற்று முன் தினம் இரவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தவர் மனைவி அகிலா-விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பிள்ளைகளிடம் சிறிது நேரம் விளையாடியவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
குமரியில் கோழி இறைச்சி, முட்டை விலை உயர்வு

குமரி மாவட்டத்தில் கோழி இறைச்சி- முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.160 முதல் ரூ.170 வரை விற்பனையான கோழி இறைச்சி தற்போது கடைகளில் ரூ.180 முதல் ரூ.250 விலையில் விற்பனையாகிறது. அதுபோல் முட்டை கடந்த மாதம் ரூ.6.20 விலையில் விற்பனையான நிலையில் தற்போது ரூ.7.50 முதல் ரூ.8 விலையில் விற்பனையாகிறது. இறைச்சி, முட்டை விலை உயர்வு அசைவப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News January 6, 2026
குமரி: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

குமரி மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <
News January 6, 2026
நாகர்கோவிலில் நாளை மின்தடை அறிவிப்பு…!

வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.7) நடைபெற உள்ளது. இதன் காரணமாக கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என்.ஜி.யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


