News January 8, 2026
குமரி: தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் வலைவீச்சு…!

நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் எட்டாமடையில் கட்டுமான வேலை செய்து வருகிறார். இவரிடம் வேர்கிளம்பியை சேர்ந்த பிரகாஷ் சிங் பணம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்பதற்காக பேரின்பராஜ் சுவாமியார் மடம் சென்ற போது அங்கு முளவிளையை சேர்ந்த 4 பேர் பைக்கில் வந்து பேரின்பராஜை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர் GH-ல் சேர்க்கப்பட்டார். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
குமரி: கடைக்காரர் மீது தாக்குதல்

வீரப்புலியை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன் (44). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அஜித் என்பவர் சீனி வாங்கிய நிலையில் பழைய தொகை கொடுக்க வேண்டும் என குஞ்சு கிருஷ்ணன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித் அவரை கல்லால் தாக்கி கீழே தள்ளியதில் 7 அடி ஆழமுள்ள ஓடையில் குஞ்சு கிருஷ்ணன் விழுந்து காயம் அடைந்தார். இதுதொடர்பாக கீரிப்பாறை போலீசார் நேற்று அஜித் மீது வழக்குப்பதிந்து விசாரணை.
News January 23, 2026
குமரி: கல்யாண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

குமரி மக்களே.. ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <
News January 23, 2026
குமரி: பிக்கப் வாகனத்தில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே முளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அஜின். டெம்போ டிரைவரான இவர் பிக்கப் வாகனம் வைத்து ஓட்டி வருகிறார். திருமணம் ஆகாத நிலையில் இருவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் புதுக்கடை அருகே பிக்கப் வாகனத்தில் அவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து வந்த புதுக்கடை போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நேற்று போலீசார் வழக்குப்பதிவு.


