News December 19, 2025

குமரி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

Similar News

News December 21, 2025

குமரி: கண்காணிப்பில் சிறப்பு ரோந்து படைகள்

image

கிறிஸ்மஸ் பண்டிகை டிச.25 அன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 5 துணை சரகங்களிலும் சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூட்ட நெரிசலில் திருட்டுகள் நடைபெறுவதை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News December 21, 2025

குமரி: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

image

குமரி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News December 21, 2025

நாகர்கோவில்: எம்.எல்.ஏ உட்பட 180 பேர் மீது வழக்கு!

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயிர் நீத்த பூரணசந்திரன் ஆன்மா சாந்தியடைய வேண்டி நாகர்கோவில் வடசேரி, கோட்டார், அஞ்சுகிராமம் உட்பட மாவட்டத்தில் 8 இடங்களில் தீபங்கள் ஏற்றி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட 180 பேர் மீது காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!