News November 6, 2025
குமரி: தீயில் கருகிய சிறுவன் உயிரிழப்பு

மேலஉடையப்பன் குடியிருப்பை சேர்ந்த பவிஷ்ணு(13) தீபாவளி அன்று உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் உறவினர் சந்திராதேவி(60) வீட்டிற்கு பட்டாசு வெடிக்க சென்ற போது விளக்கில் இருந்த மன்எண்ணெய் கொட்டி தீ விபத்து ஏற்பட்டதாக கூறிய நிலையில் சந்திராதேவி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
Similar News
News November 6, 2025
குமரி: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவ்ர் டெய்லர் லதிகா (49). இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு கண்ணுமா மூடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பளுகல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News November 6, 2025
குமரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

குமரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News November 6, 2025
குமரி: ஆசை வார்த்தைகள் கூறி ரூ.50 லட்சம் மோசடி

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜான். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நாகர்கோவிலில் தங்கி இருந்த போது 3 பேர் தொடர்பு கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்த நிலையில் வடசேரி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மோகனன், சுந்தர்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


