News August 10, 2025
குமரி: திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார்..! COMING SOON

குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புது முயற்சியாக, ரோப் கார் திட்டம் வரவிருக்குது. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் & தமிழக அரசு இணைந்து செயல்படுத்த உள்ள இந்த ரோப் கார், காமராஜர் மண்டபத்தின் பின் பகுதியிலிருந்து திருவள்ளுவர் சிலை வரை சுமார் 800மீ நீளத்திலும், கடல் மட்டத்திலிருந்து 50மீ உயரத்திலும் அமைய இருக்குது. இதற்கான பணிகள் முடிவடைந்த பின் 2027ல் இயக்கப்படும் என தகவல். #SHARE
Similar News
News August 22, 2025
குமரியில் கொலை; பகீர் வாக்கு மூலம்

மேக்கா மண்டபம் சந்தையில் மணி என்பவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் மேசாக் என்பவரைகைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் மணி வைத்திருந்த மது பாட்டில்களை காணவில்லை அவர் என்னை சந்தேகப்பட்டு எழுப்பி கேட்டார். இதில் ஏற்பட்ட தகறாலில் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.
News August 22, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆக.22) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.62 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.90 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.43 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.53 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 556 கன அடி, பெருஞ்சாணிக்கு 154 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 22, 2025
முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு 27% போனஸ்!

முந்திரி ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக C.I.T.U. தொழிற்சங்கத்திற்கும், முந்திரி ஆலை நிர்வாகிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு, கடந்தாண்டு போன்று இந்த ஆண்டும் 20% போனஸ், 2% ஊக்கத்தொகை, 5% விடுப்பு கால ஊதியம் என மொத்தம் 27% போனஸ் வழங்க நிர்வாகத்தினர் முன் வந்தனர் என T.N. முந்திரி பருப்பு C.I.T.U தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிங்காரன் கூறினார்.