News March 2, 2025

குமரி: தலா ரூ.1 லட்சம் வழங்கிய எம்.எல்.ஏ

image

இணையம்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட, புத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவின் போது கொண்டு சென்ற ஏணி உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களது குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் இன்று வழங்கினார்.

Similar News

News November 16, 2025

குமரி: SBI வங்கி வேலை; நாளை கடைசி நாள்

image

பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான 103 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 28 – 42 வயதிற்குட்பட்ட இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் – ரூ.97 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளை(நவ.17) கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

News November 16, 2025

குமரி: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

ஒரு சொந்த வீடு என்பது ஒரு குடும்பத்தின் ஆயுள் கனவு. அதன் விலை எட்டாத உயரத்தில் உள்ளதால் பலருக்கும் அது இன்று வரை எட்டாத கனவு. இதை மாற்ற ஒரு வழி இருக்கு தென்காசி மக்களே! தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடுகள் வழங்குகிறது. ஆண்டு வருமானம் ₹3 லட்சம், சொத்து இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க.SHARE பண்ணுங்க.

News November 16, 2025

குமரி: ரூ.8 லட்சம் மோசடி.. தாய், மகள் கைது

image

சேலம் இளம்பிள்ளை பகுதி நாகராஜன் ஆன்லைனில் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரிடம் குளச்சல் மெஜிலா (41) இவரது மகள் ஷானிகா (20) ஆகியோர் ஆன்லைனில் ஜவுளி வாங்கி ஜிபேயில் பணம் அனுப்பி உள்ளனர். ரூ.1 அனுப்பி ஸ்கிரீன் ஷாட்டில் திருத்தி முழுதொகை அனுப்பியதாக நாகராஜனை நம்ப வைத்துள்ளனர். ரூ.8 லட்சம் மோசடி செய்திருப்பதை தெரிந்த நாகராஜன் சேலம் போலீசில் அளித்த புகார்படி நேற்று தாய், மகள் நேற்று கைதாகினர்.

error: Content is protected !!