News January 29, 2026
குமரி: டெம்போ கவிழ்ந்து விபத்து

மருங்கூர் – இரவிபுதூர் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்த டெம்போ கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்தது. விபத்தில் டெம்போ டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். டெம்போவில் இருந்த செங்கல் லோடு வயலில் சிதறியது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும், இந்தப் பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருவதால் சாலை மற்றும் வயல் ஓரம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை.
Similar News
News February 8, 2026
குமரி மக்களுக்கு SP முக்கிய அறிவிப்பு..!

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT
News February 8, 2026
குமரி: விஷம் குடித்து ஒருவர் தற்கொலை

குமரி, காடேற்றியை சேர்ந்தவர் சந்திரன் (66). விவசாயியான இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது மனைவி உயிரிழந்தார். இதனால் வேதனையில் இருந்து வந்த சந்திரன் நேற்று அவரது மனைவி கல்லறையின் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு.
News February 8, 2026
குமரி: சங்கு எடுக்க முயன்ற மீனவர் பரிதாப பலி

இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்த ஏசுபாலன் 2 பேருடன் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் தேங்காப்பட்டினம் கடல் பகுதியில் சங்கு எடுப்பதற்காக சென்றார். சங்கு எடுத்து கொண்டிருக்கும்போது மூவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் வெளியே வந்த மூவரையும் மீனவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஏசுபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழு போலீசார் வழக்குப்பதிவு.


