News December 27, 2025
குமரி: சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி!

குமரி – பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (75). இவருக்கு திருமணம் ஆகவில்லை. முஞ்சிறையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் சமையல் செய்யும் போது அவரது சேலையில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.26) உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Similar News
News December 29, 2025
குமரி: போஸ்ட் ஆபீஸ் வேலை அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30,000 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளூர் மொழியை எழுதவும், பேசவும் தெரிந்த 18 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் <
News December 29, 2025
குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 29, 2025
குமரி: பைக் ஓட்டிய சிறுவன்- போலீசார் நடவடிக்கை!

ஆரோக்கிய புரத்தை சேர்ந்தவர் யூஜின் கிரேசி இவரது மகன் நிர்மல் பெர்னார்ட் 18வயது பூர்த்தியடையாத நிலையில் நேற்று 28ம் தேதி தாயாரின் பெயரில் உள்ள இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் மார்த்தாண்டம் பகுதியில் ஒட்டி சென்று உள்ளார். இதையடுத்து மார்த்தாண்டம் போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து யூஜின் கிரேசி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


