News September 17, 2025

குமரி: செப்.25, அக்.10 மாணவர்களே MISS பண்ணாதீங்க

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்:
செப். 25-ந் தேதி மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும்,
அக்.10ம் தேதி சுங் கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரியிலும் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு கல்விக்கட னுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் https://pmvidyalakshmi.co.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 17, 2025

குமரி: தரச்சான்று கட்டணம் குறைவு

image

குமரி ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தினமும்    பயன்படுத்தும் அரிசி, தேன், மசாலா பொருட்கள்,எண்ணெய் உட்பட 248  வகை அத்தியாவசிய பொருட்களில் கலப்படத்தை தவிர்க்கும் பொருட்டு அக்மார்க் தரச்சான்று பெற்று உற்பத்தியாளர்கள் விற்பனை செய்கின்றனர்.  தற்போது அக்மார்க் தரச்சான்று பெற பதிவுக்கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500 ஆக குறைக்கபட்டுள்ளது. அக்மார்க் தரச்சான்று கட்டாயம் ஆகும். 

News September 17, 2025

குமரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

குமரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

குமரி: பிரிந்து சென்ற மனைவி; கணவர் தற்கொலை

image

பூதப்பாண்டி அருகே ஞாலம் பகுதி மெக்கானிக்  மகேஷ்(37). 4 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளுடன் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மனைவி பிரிந்த வருத்தத்தில் இருந்த மகேஷ் 2 நாட்களுக்கு முன்பு  தடிக்காரன்கோணத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.16) மகேஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து கீரிப்பாறை போலீசார் விசாரணை. 

error: Content is protected !!