News January 25, 2026
குமரி : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 27, 2026
குமரி: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம்.
News January 27, 2026
குமரி: சுசீந்திரம் அருகே ஒருவர் தற்கொலை

சுசீந்திரம் அருகே சின்னணைந்தான் விளையைச் சேர்ந்தவர் பிரபு (42). திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. இவர் திருமணமாகாத மன வருத்தத்தில் வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 27, 2026
குமரி: கால்வாயில் மூழ்கி ஒருவர் பலி

குற்றியாணி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (44). ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார். கோதையாறு இடது கரை கால்வாயில் குளிப்பதற்காக சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை தேடிப் பார்த்த போது கால்வாயில் சடலமாக மிதந்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து குலசேகரம் போலீசார் விசாரணை.


