News February 2, 2026
குமரி: சாலையோரம் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

குமரி, கடையாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் உயிரிழந்த கடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
குமரி: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 13, 2026
குமரியில் நாளை அவசரகால மின்தடை

குமரி மாவட்டத்தில் நாளை (பிப்.14) சில அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக தெங்கம் புதூர், ராஜாக்கமங்கலம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய உப மின் நிலையங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இந்த மின்பாதையில் மின்னோட்டம் இருக்காது என கருதி பொதுமக்கள் மின்னூட்டிகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 13, 2026
குமரி: GPay / PhonePe / Paytm Use பண்றீங்களா? கவனம்!

குமரி மாவட்ட மக்களே இன்றைய காலத்தில் UPI பண பரிவர்த்தனைகள் அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும். SHARE பண்ணுங்க


