News June 15, 2024
குமரி: சவர்மா சிக்கன் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி

கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் சவர்மா சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
குமரி: வட்டார காங்கிரஸ் தலைவர் மீது பாய்ந்த வழக்கு

குமரி மாவட்டத்தில் குழித்துறை ஆற்றுப்பாலம் முதல் திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டுகளும், கொடிகளும் வைத்திருந்ததாக மேற்கு மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் ரவி(50) மீது களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அவை வைத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News March 1, 2026
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகர்கோவில் அருகே கார் மோதி பெண் பலி

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று இவர் மீது மோதியது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


