News February 17, 2026
குமரி : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News February 17, 2026
குமரி: கோயில் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவு

குமரி, பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பான ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்களது கடைகளை தாங்களே அகற்றவில்லையெனில் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அவர்களை அங்கிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
News February 17, 2026
JUST IN: குமரியில் அமையும் புதிய நீரேற்று நிலையம்

தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம், வெள்ளிமலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
News February 17, 2026
குமரி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இங்கு <


