News January 3, 2026

குமரி: கார் கண்ணாடியை உடைத்த நபரால் பரபரப்பு…

image

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரிப்பள்ளம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் இன்று (ஜன.3) அதிகாலை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை பிடித்து மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News February 4, 2026

குமரி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதா.? NO டென்ஷன்!

image

கன்னியாகுமரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 4, 2026

குமரி: ITI முடித்தவர்கள் & தொழில் நிறுவனங்களுக்கு குட் NEWS

image

நாகர்கோவிலில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 9-ம் தேதி காலை 9 மணி முதல் பிரதம அமைச்சரின் தொழிற்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. எனவே ITI முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் குமரி மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திட இங்கு <>கிளிக்<<>> செய்து, முன்பதிவு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 4, 2026

குமரி: ஒரே நாளில் புகையிலை விற்பனை தொடர்பாக 21 வழக்குகள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில், மாவட்டம் முழுவதிலும் 8 DSP க்கள் 21 இன்ஸ்பெக்டர்கள் 36 சப்-இன்ஸ்பெக்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா போன்றவை விற்பனை செய்ததாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மாவட்டத்தில் தொடரும் என்று மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!