News November 23, 2025

குமரி: காசி தமிழ் சங்கமம்.. சிறப்பு ரயில் அறிவிப்பு

image

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Similar News

News January 27, 2026

குமரி: இளைஞர் மீது தாக்குதல்

image

முகிலன் விளையை சேர்ந்தவர் ஹரிஹரன் (28). டிரைவரான இவர் குஞ்சன் விளை என்ற இடத்தில் நேற்று டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மூன்று பேர் அவரை கல்லாலும், கையாலும் தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News January 27, 2026

குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கன்னியாகுமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 27, 2026

நாகர்கோவில்: தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டல்

image

நாகர்கோவில் பறக்கின்கால் பகுதியை சேர்ந்தவர் கலைஞர் (44). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து இவர் நேற்று ஊட்டுவாழ் மடம் பகுதியில் வேலை தொடர்பாக சென்ற போது அவரை மணிகண்டன் (37) ஐயப்பன் (26) ஆகியோர் தடுத்து நிறுத்தி குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதுகுறித்து கலைஞர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டாறு போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!