News February 24, 2026
குமரி: கந்துவட்டி தொல்லையா? உடனே CALL

குமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் அதிகம் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே, பொதுமக்கள் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டாலோ மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரிலோ அல்லது PUBLIC FEEDBACK CENTRE எண்கள் 7708239100, 8122223319 மூலமாக தொடர்பு கொள்ளலாம். புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. SHARE IT
Similar News
News March 1, 2026
குமரி: ஒரு மெசேஜ் போதும் உடனடி தீர்வு !

குமரி மக்களே; உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் குறித்து மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக புகார் அளிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், குமரி மாவட்ட மக்கள் 8903331912 என்ற எண்ணில் மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இதை மறக்காம SHARE பண்ணுங்க.
News March 1, 2026
நாகர்கோவில் அருகே கார் மோதி பெண் பலி

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை வேலைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது கார் ஒன்று இவர் மீது மோதியது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 1, 2026
குமரி: டெம்போ மோதி ஒருவர் பரிதாப பலி

குமரி, தக்கலை அருகே மயிலோடு பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் ஜோஸ் (45). கொத்தனாரான இவர் ஆழ்வார்கோயிலில் இருந்து வட்டம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டெம்போ எட்வின் ஜோஸ் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தக்கலை போலீசார் நேற்று டெம்போ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


