News December 14, 2025
குமரி: கதவை உடைத்து பீரோ, கட்டில் திருட்டு!

கள்ளியடைப்புவிளை அன்னம்மாள் (60) வீட்டில் இல்லாத போது கதவை உடைத்து அங்கிருந்த இரும்பு கட்டில், பீரோ, சேர்கள், பாத்திரங்களை நேற்று யாரோ திருடி சென்றுள்ளனர். கொல்லங்கோடு போலீசார் விசாரணையில் அப்பகுதியிலிருந்த பழைய இரும்பு கடையில் இவை விற்கப்பட்டது தெரியவந்தது. மூதாட்டியின் வீட்டு கதவை நண்பருடன் சேர்ந்து உடைத்து பொருட்களை திருடி கடையில் விற்ற கிராத்தூர் கிடாரக்குழி ஜோண்யை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News March 2, 2026
குமரி: குளச்சல் அருகே இளைஞர் தற்கொலை

பாலப்பள்ளம் அருகே கூந்தன் விளையை சேர்ந்தவர் அனில் குமார் (29). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வேலை பிடிக்காதால் ஊருக்கு திரும்பியவர் அவரது அண்ணனுடன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் திடீரென்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய குளச்சல் போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News March 1, 2026
குமரி : டிப்ளோமா முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெறSHARE பண்ணுங்க.
News March 1, 2026
குமரி: ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ) <


