News January 28, 2026
குமரி: கஞ்சா விற்ற இளைஞர் கைது

கொல்லங்கோடு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுஜின் தலைமையிலான போலீசார் சூசைபுரம் பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த சூசைபுரம் பகுதியை சோ்ந்த பேனியோ (20) என்ற இளைஞரை சோதனை செய்தனர். அதில் அவர் சிறுவா்களுக்கு விற்பனை செய்வதற்காக 50 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News February 3, 2026
குமரியில் நாளை இங்கெல்லாம் மின் தடை..!

குமரி (ம) கேப் இன்டோர் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்தோப்பு, அஞ்சுகிராமம், ஆரோக்கியபுரம், வாரியூர், மருங்கூர், புதுகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9மணி முதல் மதியம் 3மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News February 3, 2026
குமரி: தேசிய அளவில் சாதனை புரிந்த காவலர்கள்

குமரி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கீதா மற்றும் தலைமை காவலர் டேவிட் ஜான் ஆகியோர், 28.01.2026 முதல் 01.02.2026 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 46 வது தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு போட்டிகளின் வெற்றி பெற்றவர்களை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (பிப். 2) பாராட்டினார்.