News October 16, 2025

குமரி: உரிமம் இன்றி பலகாரம் விற்றால் ரூ.10 லட்சம் FINE!

image

மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் பண்டிகைகால காரம் இனிப்பு விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நாககோவிலில் நேற்று நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில், உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி காரம், இனிப்பு வகை விற்றால் ரூ.20 லட்சம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனைக்கு வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

Similar News

News October 16, 2025

குமரி: லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

குமரி மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!

News October 16, 2025

குமரி: கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் கைது

image

நேற்று அம்மாண்டிவிளை பகுதியில் தக்கலை மது விலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் வெளியே தோளில் பையுடன் நின்றிருந்த இருவரை சோதனையிட்டனர். அவர்கள் பையில் 2 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பதைப்பார்த்து அவற்றை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்றதாக தனியார் கல்லூரி 3ம் ஆண்டு மாணவர்களான தென்காசி மாவட்டம் சுனில் (21), செல்வகணேஷ் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

News October 16, 2025

குமரி: திருமண செயலி.. பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி

image

திருமண செயலியில் வரன் தேடிய தேவிகோடு பெண்ணுக்கு நியூசிலாந்தில் ஒருவர் அறிமுகமாகி மணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். 2 நாள் முன்பு கொச்சி வந்ததாக செல்போனில் பேசிய அவர் அதிக பணத்துடன் வந்ததால், அவரை விமான நிலையத்தில் இருந்து விட ரூ.5 லட்சம் அனுப்புமாறு கூற வங்கிக்கணக்கில் பணம் அனுப்பினார். நேற்று, மீண்டும் பணம் அனுப்ப கூற தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார்.

error: Content is protected !!