News December 29, 2025

குமரி: இழப்பீடு வழங்க எம்.எல்.ஏ வலியுறுத்தல்

image

அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றி குன்று குளம் உடைந்து 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 31, 2025

குமரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்…!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>pmay-urban.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News December 31, 2025

குமரி: கார் மோதி தொழிலாளி பரிதாப பலி!

image

அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. இவர் நேற்று நெல்லைக்கு கட்டிட வேலைக்கு சென்று விட்டு பிராந்தநேரி குளக்கரை பகுதியில் வரும்போது பின்னால் வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 31, 2025

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் கட்டுப்பாடுகள்

image

குமரியில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன அவை பின்வருமாறு; கடலில் இறங்கி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை, இருசக்கர வாகன சாகசங்கள் தொடர்பாக பொதுமக்கள் 7708239100 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம்,18 வயதிற்க்கு கீழ் உள்ள இளஞ்சிறார்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.

error: Content is protected !!