News December 21, 2025
குமரி: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்!

படர்ந்தாலு மூடு அருகே பூவ காட்டு விளை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் ராஜ் (25) இவர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் வழக்கு உள்ளது.அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் பெயரில் மாவட்ட ஆட்சியர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சஜின் ராஜ் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News December 25, 2025
குமரியில் மட்டும் 23,043 பேர் பாதிப்பு!

தமிழகத்தில் இந்தாண்டு 5.05 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 21,454 பேர் நாய்கடிக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், அதனை அலட்சியப்படுத்தாமல், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 25, 2025
குமரி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.
News December 25, 2025
குமரி: ரயில் மீது கல் வீசிய சிறுவன் கைது

காந்திதாம் – திருநெல்வேலிக்கு வாரம் ஒரு முறை இயக்கப்படும் ஹம்சபர் ரயில் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் அருகே வந்த போது 16 வயது சிறுவன் ஒருவன் ரயில் பெட்டி மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நெல்லையில் உள்ள சிறார் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.


