News January 2, 2026
குமரி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தம்பதி செந்தில் – சந்தியா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளாகிறது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. டிச.31ம் தேதி இரவும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடர்கிறது.
Similar News
News January 2, 2026
குமரி: 14,797 காலியிடங்கள்… APPLY NOW

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஜன.10ம் தேதி நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் நடைபெறுகிறது. இம்முகாமில் 8, 10, 12th, டிப்ளமோ, ITI, டிகிரி படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். 146 நிறுவனங்களில் 14,797 காலியிடங்கள் உள்ளது. வேலைதேடுவோர் tnprivatejobs.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொடர்புக்கு – 8270865957, 7904715820, 9994605549. SHARE பண்ணுங்க.
News January 2, 2026
குமரி: சிறுவன் ஓட்டிய டூவீலர் மோதி பரிதாப பலி

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர் மணக்காட்டுவிளை பகுதியில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டூவீலர் சுரேஷ் மீது மோதியது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் G.H-ல் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் G.H-ல் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 1, 2026
குமரி: இனி நம்ப ஊரிலேயே IT வேலை

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT


