News October 18, 2025

குமரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர் பட்டியல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பின்படி, இன்று (17.10.2025) இரவு மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் சிறப்பு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாகர்கோவில், தக்கலை, மணிக்கூண்டன், களியக்காவிளை, கன்னியாகுமரி பகுதிகளில் SSI, HC மற்றும் GR அதிகாரிகள் பணி புரிவர் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News

News October 18, 2025

குமரி: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

image

குமரி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..

News October 18, 2025

குமரி: தீபாவளி பரிசு பொருட்கள் – எஸ். பி உத்தரவு

image

தீபாவளி பண்டிகை வருகிற 20ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார் அதில் தீபாவளி பரிசு பொருட்களை யாரிடமும் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாங்க கூடாது என்று கூறியுள்ளார்.

News October 17, 2025

முன்னாள் படை வீரர்கள் தொழில் முனைவராக ரூ.4 கோடி மாணியம்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று விடுத்த செய்தி குறிப்பில், குமரியில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் 45 முன்னாள் படை வீரர்கள் தொழில் தொடங்குவதற்கு 4 கோடியே 10 லட்சம் ரூபாய் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர்கள் தொழில் முனைவோராக மாற விருப்பம் தெரிவித்த மாவட்டம் குமரி மாவட்டம் ஆகும் என்றார்.

error: Content is protected !!