News December 23, 2025

குமரி: இனி உங்க PAN CARD செல்லாது?

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைக்கலாம். SHARE பண்ணுங்க.

Similar News

News December 31, 2025

குமரி: கதவை உடைத்து 16 பவுன் நகை திருட்டு

image

பார்வதிபுரத்தை சேர்ந்த அல்ஜின்டேனி(35) ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரும், இவரது மனைவி இருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரள மாநிலம் சென்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 16 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News December 31, 2025

குமரி: கர்ப்பிணி பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கர்ப்பிணி பெண்களுக்காக பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் 2.0 மூலம் நிதியுதவி பெறலாம்.
1. முதல் குழந்தை: ரூ.5,000 (இரண்டு தவணைகள்)
2. இரண்டாவது குழந்தை (பெண் குழந்தையாக இருந்தால்): ரூ.6,000 (ஒரே தவணை)
இந்த திட்டத்தில் பயன்பெற, <>விண்ணப்ப <<>>படிவத்தை நிரப்பி அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் கொடுக்கலாம். தகவல்களுக்கு 14408 என்ற எண்ணிற்கு அழையுங்கள். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 31, 2025

நாகர்கோவில் – தாம்பரம் ரயில் 45நி முன்னதாக சென்றடையும்

image

நாளை முதல் பல்வேறு ரயில்களின் வேகங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் செல்லும் அந்தியோதயா ரயில் வழக்கம் போல் பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு 45 நிமிடங்கள் முன்னதாக காலை 5.05 மணிக்கு சென்னை சென்றடையும். இதே போல் தாம்பரம் – நாகர்கோவில் ரயில் ஐந்து நிமிடம் முன்னதாக நாகர்கோவில் வந்து சேரும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!