News September 8, 2025
குமரி ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட 265 மனுக்கள்

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை ஒட்டி மனுநீதி நாளில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிடம் மனுக்களை கொடுத்தனர். இலவச வீட்டு மனை பட்டா கேட்டும், பட்டா பெயர் மாற்றம் குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட 265 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டார்.
Similar News
News September 9, 2025
குமரி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT
News September 9, 2025
குழித்துறையில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் செப்.11 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்சிறை, காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், பைங்குளம், தேங்காப்பட்டணம், ராமன்துறை, புத்தன்துறை, கிள்ளியூர், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
News September 9, 2025
குமரி: பயணிகள் அச்சப்படத் தேவையில்லை – ஆட்சியர்

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அச்சப்பட தேவையில்லை. பராமரிப்பு பணியின்போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடியில் சிறிய கீறல் விழுந்த நிலையில், அதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.