News October 24, 2025
குமரி: ஆடுகளை திருடிய 2 பேர்

2 நாள் முன்பு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த, வெள்ளமடம் காண்டிராக்டர் சுப்பிரமணியனின் 2 ஆடுகளை பைக்கில் வந்த 2 பேர் திருடிச்சென்றனர். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து ஆரல்வாய் மொழி எம்.ஜி.ஆர். நகர் விஜயகுமார் என்ற விஜய்(28), செண்பகராமன்புதூர் இசக்கிமுத்து என்ற அஜய் (24) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 24, 2025
குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்

தெற்கு ரயில்வே செய்திகுறிப்பு: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 12666 கன்னியாகுமரி ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து அக்25ம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படுவது விருதுநகர், மானா மதுரை, காரைக்குடி திருச்சி Jn. வழியாக செல்லும். மேலும் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ஜங்ஷன் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது
News October 24, 2025
குமரி மாவட்ட விவசாயிகள் வேதனை

குமரி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடி கடந்த மே மாதம் தொடங்கியது. இதில் 5,600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதுவரை 5000 எக்டேரில் நெல் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. 600 எக்டேரில் அறுவடைப் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.
News October 24, 2025
குமரி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கே <


