News August 16, 2024

குமரி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை

image

குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு(40). சி.ஆர்.பி.எப் வீரர். இவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கின்சிலின் பிரபு மீது தாயாரே புகார் செய்தார். அதன் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் நிலைய போலீசார் கின்சிலின் பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News

News January 7, 2026

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

image

ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த தம்பதியர் ஐயப்பன், சிவ ஆனந்தி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன்ர். சிவ ஆனந்தி ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்த சிவ ஆனந்தி ஜன.5-ஆம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

குமரி மக்களே ரயில் சேவையில் மாற்றம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் 12667/68, 12689/90, 22657/68 ஆகிய மூன்று ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வேயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 7, 2026

குமரியில் நாளை மின் தடை அறிவிப்பு..!

image

தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம் உபமின் நிலையத்தில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளான்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம் (ம) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

error: Content is protected !!