News April 2, 2024

குமரி அருகே இளைஞர் தற்கொலை

image

குமரி மாவட்டம் இரணியல் அருகே வலிய ஏலா பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இறந்தவர் பரசேரியை சார்ந்த வினீஷ்குமார் என்பதும் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 17, 2026

குமரி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

குமரி: கோயில் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்ற கோர்ட் உத்தரவு

image

குமரி, பகவதி அம்மன் கோயில் கன்னியம்பலம் மண்டபத்தில் உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பான ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற அமர்வு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தங்களது கடைகளை தாங்களே அகற்றவில்லையெனில் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அவர்களை அங்கிருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

News February 17, 2026

JUST IN: குமரியில் அமையும் புதிய நீரேற்று நிலையம்

image

தமிழக சட்டப்பேரவையில் 2026-27 ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்து வருகிறார். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு குமரி மாவட்டம், வெள்ளிமலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தியில் புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!