News April 27, 2025
குமரி அருகே ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அனுமதி

தமிழ்நாடு ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு கடந்தாண்டு வெளியிட்டது. எண்ணெய் & எரிவாயு எடுக்கும் பணிகளால் கடல் வளம் கடுமையாக பாதிக்கும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டெல்லியில் கடந்த வாரம் ஏலம் இறுதி செய்யப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு குமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 28, 2025
மத்திய அரசுக்கு மனோ தங்கராஜ் கேள்வி

பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். இதற்கு குமரி மாவட்ட பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தாக்கியவன் கோழையா, வீரனா என்பது இந்தியாவின் கேள்வியல்ல? 26 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். என்ன செய்து கொண்டிருந்தது உளவுத்துறை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறதா மோடி அரசு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
News April 27, 2025
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் மீது வழக்கு

காட்டுவிளை பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்தை, வாலிபர் ஒருவர் வழிமறித்து, பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல் வீசி உடைத்துள்ளார். இதுகுறித்து, பஸ் ஓட்டுநர் ராஜேஷ்குமார், கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜோயல் ராபர்ட் என்பவரை கைது செய்த போலீசார், அவர்மீது 4 பிரிவுகளில் இன்று வழக்கு பதிவு செய்தனர்.
News April 27, 2025
மின்கம்பத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்

அஞ்சுகிராமத்தில் வடமாநில வாலிபர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். போலீசார் விசாரணையில், முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, போலீசார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.