News December 18, 2025
குமரி: அரசு பஸ்சில் நூதன திருட்டு!

கருங்குளத்தாவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி. இவர் தனனுடைய 2 வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் நாகர்கோவில் சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் அம்பிகாவதியிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார். செட்டிகுளம் சந்திப்பு வந்தபோது குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்கி சென்றார். அதன் பின் குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை.
Similar News
News December 20, 2025
குமரியில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் – SP

குமரி மாவட்டத்தில் 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை SP ஸ்டாலின் நேற்று (டிச.19) பிறப்பித்தார். கோட்டார் ராஜேஷ் குமார் வடசேரிக்கும், வடசேரி அசோகன் மண்டைக்காட்டிற்கும், மணவாளக்குறிச்சி செந்தில் சுரேஷ் ராஜக்கமங்கலத்திற்கும், நித்திரவிளை ராமச்சந்திர நாயர் நேசமணி நகருக்கும், வடசேரி ஜெயசிங் கீரிப்பாறைக்கும், கோட்டாறு அனில்குமார் கீரிப்பாறைக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
News December 20, 2025
குமரி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

குமரி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில்<
News December 20, 2025
குமரி: மாணவி குளிப்பதை படம் எடுக்க முயன்ற தொழிலதிபர்

மிடாலம் பகுதியை சேர்ந்த +1 மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். 2 நாட்களுக்கு முன்பு மாணவி குளியலறையில் குளிக்கும்போது அப்பகுதி தொழிலதிபர் கில்பர்ட் மறைந்து நின்று செல்போனில் படம் எடுக்க முயலவும் மாணவி செல்போனை பிடுங்கினார். மாணவி சத்தம் போடவே கில்பர்ட் வீட்டிலிருந்து தப்பி ஓடினார். குளச்சல் போலீசார் போக்சோ சட்டத்தில் தொழிலதிபர் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.


