News March 30, 2024

குமரி: அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த இயக்கம்

image

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் அவர்களை தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பிரதீஜீன் நேற்று சந்தித்து குமரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தார். மேலும் வேட்பாளர்கள் வெற்றி பெற முழுமூச்சாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் ராணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News February 11, 2026

குமரி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

image

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News February 11, 2026

குமரி: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

செண்பகராமன் புதூர் அரசியல் காலனியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் மீனாட்சி (15). இவர் செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 11, 2026

குமரியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (பிப்.12) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் கோவிலான் விளை, படர் நிலம், காட்டு விளை, பொட்டல், சேரமங்கலம், பிள்ளையார் கோவில், மணவாளக்குறிச்சி, சின்ன விளை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!