News January 4, 2026

குமரி: அதிகாரி வீட்டில் திருடிய பெண் கைது

image

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வன அதிகாரி செல்லத்துரை. இவரது வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ30,500 திருடப்பட்டது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வந்தனர். இதையடுத்து அவரது வீட்டில் வேலை செய்த மாங்கரையைச் சேர்ந்த பிரேமா 3 மாதத்திற்கு முன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இவரை அழைத்து விசாரித்த போது அவர் திருடியதை ஒப்பு கொண்ட நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News January 23, 2026

குமரி: ரயில் நேரத்தில் மாற்றம்!

image

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கன்னியாகுமரியிலிருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜன. 26 அன்று அதிகாலை 3.45 மணிக்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *SHARE

News January 23, 2026

நாகர்கோவில்: 6ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை!

image

நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் தங்கும் விடுதியில் சமையல் வேலை பார்த்து வந்த சிவா என்பவர் அந்த விடுதியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நேசமணி நகர் போலீசார் 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி நேற்று சிவாவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்

News January 23, 2026

உங்க கனவு திட்டம் கணக்கெடுப்பு – ஆட்சியர் தகவல்

image

உங்க கனவை சொல்லுங்க திட்டத்தில் குமரி மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள 4,97,784 குடும்பங்களையும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியை மேற்கொள்ள மொத்தம் 1,057 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது வீடு வீடாகச் சென்று 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை வழங்கி கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!