News August 20, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 20) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.61 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.30 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.68 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.79 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 648 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
Similar News
News February 6, 2026
குமரி: கஞ்சா வழக்கில் வாலிபர் கைது

கருங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் பிரிட்ஜோ. இவரை பைக்கில் வந்த கஞ்சா போதை கும்பல் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளது. மேலும், அந்த கும்பல் பொதுமக்களை அரிவாள் காட்டி மிரட்டியும் உள்ளது. இதுகுறித்த புகாரில் அஸ்வின் என்ற வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் விசாரணையில் இவர் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
News February 6, 2026
குமரி: ரூ.50,500 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. APPLY NOW!

மத்திய அரசின் BSNL நிறுவனத்தில் 120 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம் நேற்று (பிப்.5) முதல் தொடங்கி உள்ளது. பொறியியல் டிகிரி முடித்த 21 – 30 வயதிற்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News February 6, 2026
குமரி: 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை

பேயன்குழியை சேர்ந்தவர் சஜினி. இவரது மகள் அக்சயா (13) 8-ம் வகுப்பு படித்து வருகிறார். பிப்.4 அன்று அக்சயாவுக்கும், அவரது தங்கைக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் தங்கையின் தலை முடியின் சிறுபாகத்தை அக்சயா வெட்டியதாக கூறப்படுகிறது. தங்கை அழுததால் தாய் தண்டிப்பார் என பயந்த அக்சயா வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.


