News March 10, 2025

குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

image

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 28.18 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 25.40 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.92 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 3.02 அடி தண்ணீரும் இன்று உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 113 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 26 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

Similar News

News March 10, 2025

புனே-குமரி ரயிலில் 12 கிலோ கஞ்சா சிக்கியது

image

புனேயிலிருந்து கன்னியாகுமரிக்கு இன்று காலை 11.30 மணி அளவில் ரயில் வந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இந்த ரயில் வந்த போது என்ஜினை அடுத்துள்ள பெட்டியில் ஒரு பை அனாதையாக கிடந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எடுத்து சோதனை செய்த போது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News March 10, 2025

வடிவீஸ்வரம் தேரோட்டத்தில் பங்கேற்கும் MP, MLA, SP, கலெக்டர்

image

கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் அழகம்மை சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக நாளை(மார்ச் 11) திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இத்தேரோட்டத்தில் கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த், நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, ஆட்சியர் அழகு மீனா மீனா, எஸ்பி ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News March 10, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(மார்ச் 10) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவரை நியமிக்க கோரி அரசு ரப்பர் கழக தோட்டத் தொழிலாளர்கள் 90வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#பகல் 2 மணிக்கு கலத்துப் பாடு ஸ்ரீ கண்டம் சாஸ்தா கோவிலில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு காவடி ஊர்வலம் நடைபெறுகிறது.#இரவு 9:30 மணிக்கு மண்டைக்காடு கோவிலில் பெரிய சக்கர தீவட்டி நிகழ்ச்சி நடக்கிறது.

error: Content is protected !!