News January 2, 2026

குமரியில்153 கிலோ கஞ்சா கடந்த ஆண்டு பறிமுதல்

image

குமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 281 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 153 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட காவல்துறையின் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டு 255.98 சதவீதம் அதிகமாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை நேற்று (ஜன.1) தெரிவித்துள்ளது.

Similar News

News January 26, 2026

குமரி: இனி கரெண்ட் பில் தொல்லை இல்லை!

image

குமரி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>இங்கே கிளிக்<<>> செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். உங்களது நண்பர்களும் இதில் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 26, 2026

குமரி: பேரூராட்சி துணைத் தலைவர் உட்பட 4 பேர் கைது

image

குளச்சல் பகுதியில் கவரிங் நகை கடையில் பெண் ஊழியர் தனியாக இருக்கும்போது அவரின் கவனத்தை திசை திருப்பி தங்க முலாம் பூசிய நகைகளை 4 பெண்கள் உட்பட 5 பேர் திருடி சென்றனர். இது தொடர்பாக குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், புத்தளம் பேரூராட்சி துணைத் தலைவர் பால் தங்கம், சபரிஷா, தங்க புஷ்பம் மற்றும் கார் டிரைவர் அனீஸ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News January 26, 2026

குமரி: முதலையை பிடிக்கும் பணிகள் தீவிரம்

image

கோதையாற்றில் கடையால மூட்டு – திற்பரப்புக்கு இடையே முதலை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து ஆற்றுப்பகுதியில் மிதவை கூண்டு அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடையால மூடு அருகே ஒரு நடைக்கல் பகுதிக்கும் திற்பரப்பு தடுப்பணை படகு சவாரி நடைபெறும் எல்லை பகுதிக்கும் இடையே வலை கட்டி முதலையின் நடமாட்டத்தை குறிப்பிட்ட இடத்திற்குள் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

error: Content is protected !!