News May 24, 2024
குமரியில் 8 செ.மீ மழைப்பதிவு!

கன்னியாகுமரியில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் 8 செ.மீட்டரும், அடையமடையில் 6 செ.மீட்டரும் சித்தாறு-I, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, பாலமோர், மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, சுருளக்கோடு ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் முள்ளங்கினாவிளை, திற்பரப்பு, மைலாடி, நாகர்கோயில் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவானது.
Similar News
News November 5, 2025
குமரி: VAO லஞ்சம் கேட்டால் இனி இதை பண்ணுங்க!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், குமரி மாவட்ட மக்கள் 04652-227339 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 5, 2025
குமரி: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
✅கூட்டு பட்டா,
✅விற்பனை சான்றிதழ்,
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது,
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 5, 2025
குமரி: அலைபாயுதே பாணியில் ஏமாற்றிய பெண்

ராமன்துறையை சேர்ந்த சஜினும்(35) – முள்ளூர்துறையை சேர்ந்த பிளஸ்சியும்(23) காதலித்து 2023-ல் ரகசியமாக திருமணம் செய்து அதை மறைத்து வாழ்ந்தனர். பெற்றோர் வீட்டில் இருந்த பிளஸ்சியை ரூ.12 லட்சம் செலவு செய்து கத்தாரில் வேலை செய்து சஜின் படிக்க வைத்தார். தற்போது முறைப்படி திருமணம் செய்ய பிளஸ்சி சம்மதிக்காமல் ஏமாற்றியதால் அவர் மீது குழித்துறை கோர்ட்டில் சஜின் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.


