News April 4, 2025
குமரியில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான உயர் அழுத்த புதைவடம் பழுதை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல்.5 முதல் 7ஆம்)தேதி வரையிலும் பார்வதிபுரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் கூறியுள்ளார்.ஷேர் செய்யவும்.
Similar News
News April 5, 2025
குமரி: பெண்களுக்கு குவியும் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட தானியங்கி நிபுணர் (Automation Specialist) காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
News April 5, 2025
குமரி: போலீஸ் வீட்டில் திருட்டு

வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி. இவர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவி பிந்துஜா கணவரை பார்க்க வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
News April 4, 2025
மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்க ₹ 40 லட்சம் நிதியுதவி

கன்னியாகுமரி உட்பட கடலோர மீனவர்களிடையே மீன்பிடிப்பினை மாவட்டங்களில் மாற்று முறை ஊக்குவிப்பதற்காக, விலைமதிப்பு கணவாய் மீன்கள் பிடிப்பதற்கு தேவையான உபகரணங்கள் வாங்கிட மீனவர்களுக்கு ரூபாய் 40 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்.
என தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.