News March 28, 2025
குமரியில் 207 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவில்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கியது. மாவட்டம் முழுவதும் 122 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெற்றது. மொத்தம் 22, 208 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 22,001 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 207 பேர் தேர்வு எழுதவில்லை என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 2, 2025
குமரியில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்

குமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்,மீன் இனப்பெருக்க காலத்தை ஒட்டி வரும் 15ஆம் தேதி முதல் ஜூன்.15ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை.
News April 2, 2025
Grindr செயலி மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

குமரி மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்; Grindr செயலி மூலம் ஏமாற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நபர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் மாவட்ட காவல்துறைக்கு தகவல் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது போன்ற செயலியை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்ப்பது நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.
News April 2, 2025
குமரியில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் வரை மானியம்

குமரி மாவட்டத்தில் கோழி, ஆடு, பன்றி வளர்க்க 50 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இதன் மூலம் புதிய கோழிப் பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாட்டுப் பண்ணைகள் அமைக்கலாம். தகுதி உடையவர்கள் https://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.