News December 18, 2025
குமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

குமரி மாவட்டத்தில் ரயில் மூலம் சில தினங்களாக கஞ்சா தொடர்ச்சியாக கடத்தி வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் இன்று (டிச.18) தகவல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 19, 2025
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி

குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவியப்போட்டி குமரி மாவட்ட காவல்துறை சார்பில் நடத்தப்படுகிறது. ரூ.15000, ரூ.10000, ரூ7500 என பரிசுகள் வழங்கப்படுகிறது. ஓவியத்தை ஜன.5.ம் தேதிக்குள் நாகர்கோவில், குமரி, தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் ஆகிய போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கலாம் என குமரி மாவட்ட எஸ்.பி தகவல் தொிவித்துள்ளார்.
News December 19, 2025
ரேஷன் கார்டு தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை தயார்

பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் 5.35 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. இவை சென்னையிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு கோணத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள 804 ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. பொங்கலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக வேட்டி, சேலை வழங்க அரசு உத்தரவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 19, 2025
குமரியில் பைக்குகள் திருடிய கேரள வாலிபர் கைது

கடந்த மாதம் திருவட்டார் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தோப்பு, வேர்கிளம்பியில் 3 பைக்குகள் திருட்டு போனது. இந்நிலையில் களியக்காவிளையில் போலீசார் ரோந்து சென்றபோது கேரள மாநிலம் திருவனந்தபுரம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த சஜித்கான்(25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் திருவட்டார் பகுதியில் 3 பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து 3 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


