News February 23, 2026
குமரியில் 2 ட்ரோன்கள் பறக்க தடை – ஆட்சியர் அறிவிப்பு

குமரி ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு – தமிழக முதல்வர் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் 24.02.2026 மற்றும் 25.02.2026 ஆகிய நாட்களில் குமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் & இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar News
News February 26, 2026
குமரி: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! APPLY NOW

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் இங்கு <
News February 26, 2026
குமரி : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். SHARE IT
News February 26, 2026
குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது

நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் பெங்களூரில் IT கம்பெனியில் பணியாற்றி வந்தார். 2025 ஜுன் 17அன்று ஒரு WhatsApp குழுவில் இணையும்படி வந்த லிங்கில் அவர் இணைந்து அதில் உள்ளவர்கள் கூறியபடி பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரை சேர்ந்த யாஸ்வர்தன் குமார் (19) என்ற இளைஞரை நேற்று கைது செய்தனர்.


