News August 22, 2025
குமரியில் 18 பகுதியில் முகாம்கள்..!

உழவரைத்தேடி வேளாண்மை முகாம் இன்று(ஆக.22) சுசீந்திரம், பறக்கை, நாவல்காடு, நுள்ளிவிளை, வெள்ளிமலை, கண்ணனூர், பளுகல், இனயம்புத்தன்துறை, அதங்கோடு, அகஸ்தீஸ்வரம், தர்மபுரம் தெற்கு, தோவாளை, குமாரபுரம், நெய்யூர், குலசேகரம், அண்டுகோடு, கிள்ளியூர், குளப்புரம் ஆகிய 18 கிராமங்களில் நடக்கவுள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு குறைகள் & கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் அறிவிப்பு.
Similar News
News August 22, 2025
குமரி: மருமகனைக் கொன்ற மாமனார் கைது!

மயிலாடி, சிபின்(25) என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு சிபினிடம் சண்டையிட்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று(ஆக.21) மனைவியை அழைத்து வர சிபின் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சிபினின் மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி சிபின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிபின் உயிரிழந்தார். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.
News August 22, 2025
குமரி: FREE கேஸ் சிலிண்டர் BOOK பண்ணிட்டிங்களா?

குமரி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News August 22, 2025
100 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்க இலக்கு – ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் பெற ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார். இதில் இதுவரை ரூ.28 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாணவ-மாணவியர்கள் உயர்கல்விக்கு கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து கடன் பெறலாம் என்றும் அவர் கூறினார்.