News March 22, 2025
குமரியில் 17 புதிய பேருந்துகள் தொடக்கம்

குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் இன்று 17 புதிய பேருந்துகள் வழி தடத்தை மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ஜே.ஜி பிரின்ஸ், தாரகை கத்பர்ட், துணை மேயர், மண்டலத்தலைவர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.*பஸ் பயணிகளுக்கு பகிரவும்*
Similar News
News September 22, 2025
குமரி: சிப்காட் உணவு வளாகத்தில் வாடகைக்கு இடங்கள்

குமரி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் மெகா உணவு பூங்கா அமைக்கபட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் தற்போது 13 ஏக்கர் அளவிலான இடங்கள் தொழில் முனைவோர்களுக்கு 94 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தொழில் முனைவோர்கள் வடசேரி வேளாண்மை தொழில் விற்பனை துணை இயக்குனரை அணுக ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 22, 2025
குமரி: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

குமரியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News September 22, 2025
குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

குமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <