News December 26, 2025
குமரியில் 156 வாகனங்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அதிவேகமாக மற்றும் பொதுமக்களுக்கு தொந்தரவாக வாகனம் ஓட்டிய மற்றும் குடிபோதையில் ஓட்டி வந்த 4 இருசக்கர வாகனம் உட்பட 156 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு தொந்தரவாக செயல்பட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குமரி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
குமரி: ஆற்றில் குதித்த புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

முதுகுமெல் பகுதியை சேர்ந்த இவாஞ்ஜெறி (28) சட்டம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில் இவாஞ்ஜெறி டிச.24ம் தேதி குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் போதை தலைக்கு ஏறியதால் தாமிரபரணி ஆற்றில் குதித்தார். 2 நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கமுகனூர் ஆற்றில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை.
News December 27, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை..!

குமரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 27, 2025
பொது விநியோகத் திட்ட குழுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

அரசின் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் கடந்த அக்., மாதம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய குழுவில் சேர்வதற்கு பெண்கள், நுகர்வோர், பெருமைமிக்க நபர்கள் (ம) ஆதரவற்றோர் விண்ணப்பிக்கலாம். இதில் 5 பேர் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளோர் டிச.31ஆம் தேதிக்குள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.


