News April 2, 2025
குமரியில் 15ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமல்

குமரி அருகே உள்ள சின்ன முட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிலையில்,மீன் இனப்பெருக்க காலத்தை ஒட்டி வரும் 15ஆம் தேதி முதல் ஜூன்.15ஆம் தேதி வரை மீன் பிடிக்க தடை.
Similar News
News April 6, 2025
குமரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் டெலிகாலர் பிரிவில் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 – 59 வயதிற்குட்பட்டவர்கள் மே.31 க்குள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 6, 2025
குமரியில் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2025 அன்று 5 ஆண்டுகள் நிறைவடைந்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் 10 தேர்ச்சி ரூ.300, +2 தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை நாட்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். SHARE IT
News April 6, 2025
குமரி அணைகளின் இன்றைய நீர்மட்டம் விபரம்

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.6 ) 30.18 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.05 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.72 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.82 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 233 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 72 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.