News April 25, 2025
குமரியில் 13,000 புதிய காப்பீட்டாளர்கள் காப்பீடு செய்துள்ளனர்

குமரி மாவட்ட தபால் துறையில் கிராமிய தபால் ஆய்வு காப்பீடு திட்டத்தில் ரூ.178 கோடியும், தபால் ஆயுள் காப்பீடு திட்டத்தில் ரூ.275 கோடியும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக 13,000 பயனாளிகள் காப்பீடு செய்து இணைந்துள்ளனர். ஆதார் பதிவு, திருத்த சேவைகள் மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 336 பயனாளிகளும், புதிய பாஸ்போர்ட் மற்றும் புதுப்பித்தல் சேவையின் மூலம் 18,484 பயனாளிகள் பயன் அடைந்தனர்.
Similar News
News November 13, 2025
கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில்

கோவில் நகரமான கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரயில் இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கன்னியாகுமரி வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இது வருகிற டிச-7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து வாரணாசி புறப்பட்டு செல்கிறது. 13ம் தேதி வாரணாசியில் இருந்து கன்னியாகுமரிக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இதனை ரயில்வே நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.
News November 13, 2025
குமரி மாவட்ட கோர்டில் வழக்குகள் நிலுவையில் உள்ளதா?

சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் மாவட்ட, வட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் டிச.13ம் தேதி அன்று மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை முடிக்க விருப்பமுள்ளோர் நவ.24 ம் தேதிக்குள் நாகர்கோவில் சட்டப் பணிகள் குழுவில் தெரிவிக்கலாம்.
News November 13, 2025
குமரி: PF பிரச்சனைகள் தீர ஓரே வழி!

குமரி மக்களே, உங்கள் PF கணக்கு சிக்கல்கள், பேலன்ஸ் மற்றும் பண பரிவர்த்தனைகளுக்குத் தீர்வு காண குமரி மாவட்டத்திற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண் உள்ளது. இந்த 6381122366 எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி PF பேலன்ஸ், பணம் எடுத்தல், PF பிரச்சனைகள் குறித்த சேவைகள் மேற்கொள்ளலாம். நீண்ட நாள் PF பிரச்சனைகளை குமரி மாவட்ட அதிகாரிகளிடம் நேரடியாக பேசி நிரந்தர தீர்வு காணலாம்.மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


